
தூத்துக்குடி மாவட் டம் ஏரல் தாலுகாவில் உள்ள கொற்கை, சிவகளை ஆகிய தொல்லியல் தலங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் பற்றி விவரிக்கிறது இந்நூல் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரை இணைக்கும் நெடுஞ்சாலைக்கு இடையே அமைந்துள்ள ஊர் ஏரல். இதன் தாலு காவில் உள்ள ஒரு சிறிய கிராமமே கொற்கை. சங்க இலக்கியங்களில் குறிப் பிடப்பட்டுள்ள கிராமம். இங்கு நடத்தப்பட்ட அக ழாய்வில் கி.மு.300 முதல் கி.பி. 200 வரையிலான தமிழ் பிராமி எழுத்துக் களுடன் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் காணப் பட்டன. இதேபோல ஏரலின் மேற்கில் உள்ள சிவகளையில் பல்வேறு தொல்பொருட்கள் கண்ட றியப்பட்டன.இதனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வு இடங்களாக இவை இருக்கின்றன. இந்நூலில் ஏரல் தாலுகாவின் வரலாற்றுப் பின்னணியிலிருந்து தொடங்கி ஏரல் தாலுகா விலுள்ள தொல்லியல் இடங்கள், கொற்கை அகழாய்வு, சிவகளை அகழாய்வு, அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் வரை விளாவாரியாக தந்துள் ளார் இந்நூலாசிரியர் முனைவர் க.கந்தசுப்பு (கொற்கை-சிவகளை அகழாய்வுகள் (ஏரல் தாலுகா), முனைவர் க.கந்தசுப்பு, பொன். சொர்ணா பதிப்பகம், விலை : ₹200/-, தொடர்புக்கு : 9442834236