
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் விவசாயி ஒருவரின் அமெரிக் கப் பயணம் பற்றி விவரிக்கி றது இந்நூல், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயிர் தொழில்நுட்பத்துறையின் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர், டாக்டர் சுதாகர் சிவசுப்ரமணியம். இவர் அமெரிக்காவில் பணி செய்த நேரம், இவரது தந்தை சிவ சுப்ரமணியம் அமெரிக்கா சென்றுள்ளார். 6 மாத காலம் தங்கியிருந்த அவர், தனது அனுபவத்தை சுமார் முந்நூறு பக்கங்களில் எழுதி இருக்கிறார். அவர் இறப்புக்குப் பிறகு தற்செயலாக இந்த அனுபவக் கட்டுரைகள் பேராசிரியர் சுதாக ரின் கண்ணில் பட்டிருக்கிறது. அதில் பல்வேறு தகவல்களை தனது தந்தை விவரித்திருந்த பாங்கு அவரைக் கவர்ந்திருக் கிறது. உடனே, ‘அமெரிக்கா வில் ஆத்தூர் விவசாயி’ என்ற நூலாக உருவாக்கியுள்ளார். இந்நூலில் அவர் தந்தையின் வாழ்க்கைச்சுருக்கம் மற்றும் அமெரிக்கப் பயணம். அவர் தந்தையின் ஐந்து தங்கைகளில் மூன்றுபேரின் வாழ்வில் நடந்த சுவையான அனுபவங்கள், தந்தை வாழ்ந்த கிராமத்தில் நூலாசிரியர் கவனத்தை ஈர்த்த காதல் இடம்பெற்றுள்ளன.
(அமெரிக்காவில் ஆத்தூர் விவ சாயி, டாக்டர் சுதாகர் சிவசுப்ர மணியம், பொன் சொர்ணா பதிப்பகம், விலை: ₹225/-, தொடர்புக்கு: 87609 70002)