தாமிரபரணி நதி, மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயணம், நெல்லை ஜமீன்தார்களின் வரலாறு, சித்தர்கள் ஸ்தலங்கள், சிறு தெய்வங்களின் பூர்வீகம் தேடி பயணம், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வரலாறுகளை தேடுதல் என பல வகையான களப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. அவரது நாவலை தீதும் நன்றே என்ற இந்நூல். இதில் கொரோனா காலத்தை நாவல் வழியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். நாவலின் கதாநாயகி முத்து கிளி மும்பைக்கு செல்கிறாள். அங்கு அவளைக் கடத்த முயற்சிக்கிறார்கள். போலீஸ் முத்துகிளியை மீட்க்கிறது. அதற்கு இளைஞர் ஒருவர் உதவுகிறார். அது கொரோனா காலம் என்பதால் முத்து கிளிக்கும் அவரை காப்பாற்றிய இளைஞருக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. அவர்களை தனிமைப்படுத்துகிறார்கள் பின்னர் ஒரு வழியாக முத்துகிளி திருநெல்வேலி வந்து சேருகிறாள். மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்தின் தென்கோடிக்கு வருவதை இந்நாவல் சுவைபட சொல்கிறது.
(தீதும் நன்றே. முத்தாலங்குறிச்சி காமராசு, வெளியீடு: சுவடு, விலை: ₹330/-, தொடர்புக்கு – 9551065500


