
விடிலிக்காடு
விடிலி என்றால் பனை ஓலை களால் செய்யப்பட்ட குடிசை என்பதாகும். அப்படிப்பட்ட வீடுகளை யும், அவற்றில் வாழ்பவர்களையும் சித்தரிக்கும் நாவல் என்பதால், விடி லிக்காடு என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது .பனைத்தொழிலாளியின் அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்ப வங்களால் கதை பின்னப்பட்டு இருக் கிறது. பனை மரத்தில் பாலையை எந்தப் பருவத்தில், எப்படி எடுக்க வேண்டும், பாலுக்கு கலையம் கட்டு வது, பின்னர் அடுப்பு போடுவது, பரண் கட்டுவது, பெட்டி முடைவது போன்ற பனைத்தொழில் தொடர்பான அனைத் தும் நாவலில் விவரமாகச் சொல்லப் பட்டு இருக்கின்றன. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நாவலில், தீண்டாமைக் கொடுமையின் உச்சமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
(ஆசிரியர்:காமராசு செல்வன்; வெளியீடு: பொன்சொர்ணா; விலை: ரூ.200; செல்போன்: 94428 34236)