கிராமஉதயம் தலைமை அலுவலகம் கோபாலசமுத்திரம் அலுவலகத்தில் வைத்து 1000 மரக்கன்றுகள் வழங்குதல் நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் சேவையை தொடங்கி வைத்தார். கிராம உதயம் வழக்கறிஞர் ஆலோசனை குழு உறுப்பினர் புகழேந்தி பகத்சிங் மற்றும் கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் தனி அலுவலர் கணேசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் சேகர் ஆறுமுகத்தாய் சுசிலா தன்னார்வ தொண்டர் புவனேஸ்வரி ஆகியோர் மரக்கன்றுகள் நடும் அவசியம் குறித்து கருத்துரை வழங்கினார்.
கிராம உதயம் தன்னார்வ தொண்டர் சுமிதா நன்றியுரை வழங்கினார்கள்.


