தூத்துக்குடியில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, புதிய ஆட்டோ நிறுத்தம் அமைப்பது மற்றும் ஆகஸ்ட் 13ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக ஆலோசனைகள் கேட்கப்பட்டது.
தலைமை மாவட்ட செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ரவிச்சந்தர், இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் சரவணகுமார், சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சக்திவேலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


