நாட்டார்குளத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் தெருமுனைப்பிரச்சாரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாட்டார்குளத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் தெருமுனைப்பிரச்சாரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடசுப்பு, முன்னாள் கருங்குளம் ஒன்றிய சேர்மன் பிச்சையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினர்.
மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம். மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி. ஜெயக்குமார் ரூபன், கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கிபாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, மாவட்ட கவுன்சிலர் பாலசரஸ்வதி, மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணை அமைப்பாளர் கலீலூர் ரகுமான், முன்னாள் சேர்மன் சுடலை பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட பிரதிநிதி முருகன், மாரிமுத்து, கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் முத்துலட்சுமி, வீரபாகு, விவசாய அணி அமைப்பாளர் கந்தசாமி, மு.கோவில்பத்து கிளைச் செயலாளர் முருகன், விவசாயத் துணை அமைப்பாளர் துரைப்பாண்டி நேரு, வழக்கறிஞர் துணை அமைப்பாளர் சங்கர், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பழனி குமாரசாமி, வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், மு.கோவில்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ், இளைஞரணி அமைப்பாளர் மாசிலாமணி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மாரியம்மாள் தம்பிராஜன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் செல்வி, விட்டிலாபுரம் கழகச் செயலாளர் மகாராஜன், கிளைச் செயலாளர் அருள்ராஜ், கிளைக்கழக பிரதிநிதி மாசிலாமணி, ஒன்றிய பொருளாளர் மந்திரமூர்த்தி, முறப்பநாடு ஒன்றிய பிரதிநிதி முருகன், தகவல் தொழில் நுட்ப அணி இளைஞரணி துணை அமைப்பாளர் பேச்சுதுரை, ஆழிகுடி ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாட்டார்குளம் கிளைச் செயலாளர் குண்டுமணி நன்றி கூறினார்.
அப்போது மேடையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர் பேசுகையில், ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களிடம் குழப்பதை ஏற்படுத்தி ஏதாவது செய்ய வேண்டும் என்று பிஜேபி கனவு காண்கிறது. இங்கு மதம் ஜாதி என்ற பிரிவில் நாங்கள் இல்லை என்ற வகையில் அண்ணன் தளபதி அவர்கள் ஆட்சி செய்து வருகிறார். இந்த பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கத்தின் பேரில் எப்படியாவது குழப்பி விட வேண்டும் என்று கனவு காண்கிறது. இந்த கனவு தமிழகத்தில் நடக்காது. அதிமுகவை பற்றி சொல்ல வேண்டியத்தில்லை. இன்று அதிமுகவில் நான் பெரிய ஆளா, நீ பெரிய ஆளா, ஒற்றை தலைமையா, இரட்டைத் தலைமையா என்று ஓ.பன்னீர்செல்லமும், எடப்பாடி பழனிச்சாமியும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் எப்படி இந்த கட்சி விளங்கும். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் இருந்தார், ஜெயலலிதா இருந்தார் இந்த கட்சி இருந்தது. தற்போது இந்த கட்சி இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. ஆனால் திமுக கட்சி என்பது ஒரு ராணுவ கட்டுப்பாடுடன் விளங்கி வருகிறது. இதனை யாராலும் அசைக்க முடியாது என்று கூறினார்.


