ஒரு திருச்சபைக்கு பின்னால்
ஒரு இடத்தில் எழும்பியுள்ள சின்ன திருச்சபையோ பெரிய திருச்சபையோ.. அதற்கு பின்னால் ஒரு போதகரின் திரளான கண்ணீர் இருக்கின்றது.. அவர் அடைந்த அவமானங்கள் இருக்கின்றது..
அவரின் பசியுள்ளநாட்கள் இருக்கின்றது.. கைவிடப்பட்ட சூழ்நிலைகள் இருக்கின்றது..
உடன் இருந்தோரின் துரோகங்கள் இருக்கின்றது..
கால்வலிக்க நடந்த நடைகள் இருக்கின்றது.. பெட்ரோல் இன்றி வண்டியை தள்ளி வந்த பாதைகள் இருக்கின்றது.. மழையில் நனைந்தும், வெயிலில் அலைந்ததால் வந்த வியாதிகள் இருக்கின்றது.. போர்வையின்றி குளிரில் புரண்ட நாட்கள் இருக்கின்றது..
பிள்ளைகளை படிக்க வைக்க முடியாத, பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் போன காலங்கள் ஏன் அவர்களையே மரிக்க கொடுத்த வலிகள் இருக்கின்றது. வளர்ந்த தலைவர்கள் மூலம் வந்த சோதனைகள் இருக்கின்றது.. சபைக்கு அருகிலிருப்பவர்களின் எரிச்சலான சண்டை, எதிர்ப்பாளரின் அடிகள், உதைகள், அசிங்கமான வார்த்தைகள் இருக்கின்றது..
ஆபத்தில் சொந்த உறவுகள் கூட விசாரிக்க வராத சூழ்நிலைகள் இருக்கின்றது..
சபை கட்டுவதற்காக அலைந்த அலைச்சல்கள். தியாகங்கள்.
ஏமாற்றபட்ட சூழ்நிலைகள் கடன்பட்டு நின்ற சூழ்நிலைகள்.
சபையில் நிதி திரட்ட அறிவிப்பு தந்து அதை சிலர் அவமானப்படுத்தி பேசிய
வலிகள் இருக்கின்றது.. ஆலயம் கட்ட ஓடியபோது அரசாங்கம், காவல்துறை தந்த சோதனைகள்
பயமுறுத்தல்கள் இருக்கின்றது..
கஷ்டப்பட்டு சம்பாதித்த ஆத்துமாக்களை அடுத்தவர் ஆட்டைய போட்டு
சென்ற சம்பவங்கள் இருக்கின்றது..
நம்பி மேடையேற்றிவர்களால் உண்டான குழப்பங்களால் சபை உடைக்கப்பட்ட நாட்கள் இருக்கின்றது..
கடிந்து கொண்டதால் நன்மை பெற்ற ஜனங்கள்
எல்லாம் குற்றபடுத்தி விலகிய வடுக்கள் இருக்கின்றது.. இதற்கு மேலும் பல வேதனைகள் புதைந்து சாய்ந்திடாமல் நிற்கும் சபைகளை சிலர் செய்யும் தவறான செய்கைகளை கொண்டு சடுதியாக பொதுவாககுற்றப்படுத்தி எல்லா சபையின்மேலும் கரி பூசிட நினைக்கும் மனிதர்களுக்கு ஒன்று தான்சொல்ல நினைக்கின்றேன்…
பாதாளத்தின்வாசல்கள்சபையை # மேற்கொள்வதில்லை சபை போதகர் எல்லாம் தூக்கிவைத்த கல்லுகள் அல்ல.. உளிகளாலும் சுத்தியல்களாலும் காயங்களை சுமந்து நிமிர்ந்து நிற்கும் மனிதர்கள்.


