எடுத்ததுமே டைட்டில் கார்ட். அதிலும் முதலாவது அட்டை, நன்றி நவிலல். எப்படி பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்துவிட்டு அல்லது கற்பூரம் காட்டிவிட்டு எந்தவொரு நல்ல செயலையும் செய்வோமோ அப்படி ‘முத்தாலங்குறிச்சி காமராசு’ அவர்களுக்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு இந்த ‘ஜமீன்களின் கதை’ வரிசையில் ‘நெல்லை ஜமீன்கள்’ குறித்து பார்க்கஆரம்பிக்கலாம்.அதுதான் நியாயம்.தெளிவான சரித்திர ஆதாரங்கள் கிடைக்காத நிலையில். நாக்குத் தள்ள ஊர் ஊராக காட்டிலும் மேட்டிலும் வெயிலிலும் மழையிலும் அலைந்து சம்பந்தப்பட்ட ஜமீன்களின் இண்டு இடுக்கு விடாமல் நுழைந்து அலசி வாய்மொழி வரலாற்றையும், தப்பித் தவறி கண்ணில் பட்ட ஆவணங்களையும் சேகரித்து ‘நெல்லை ஜமீன்கள்’ என்ற நூலை தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொடுத்திருப்பவர் அவர்தான்.இதிலிருந்துதான் நூல் பிடித்து எவரெஸ்டில் ஏறப்போகிறோம். ஸோ, ‘முத்தாலங்குறிச்சி காமராசு’வுக்கு ஒரு ஓ…’ அல்லது ‘ஜே…’ போட்டுவிட்டு நம் கடமையைத் தொடர்வோம். ரைட், தமிழகத்தின் தென்கோடியிலிருந்து தொடங்கலாமா?
(கே என் சிவராமன் எழுதிய ஜமீன் கதைகளின் நூலில் ஆங்காங்கே என்னுடைய பெயரை பதிவிட்டுள்ளார். சந்தோஷமாக இருக்கிறது. நன்றி சார்- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு)


