கோவில்பட்டியில் லாரியின் பேட்டரிகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வடக்கு இலுப்பை யூரணி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மனோஜ். லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். இவர், சம்பவத்தன்று இரவு தனது டிப்பர் லாரியை கோவில்பட்டி-கடலையூர் சாலையில் உள்ள அந்தோணியார் தேவாலயம் அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாராம்.
மறுநாள் காலை பார்த்தபோது, லாரியிலிருந்த 2 பேட்டரிகளை காணவில்லை.இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, கடலையூர் காமராஜர் நகரைச் சேர்ந்த முத்து முருகபாண்டி மகன் கார்த்திக் (27) என்பவரை கைது செய்தனர்.


