தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் காசநோய் டாக்டர் சுந்தரலிங்கம் தலைமையில் காசநோய் ஒழிப்பு திட்டப் பணிகளை ஆய்வு செய்யப்பட்டது.
கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அலுவலர் டாக்டர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
சளி பரிசோதனை கூடம், எக்ஸ்ரே பிரிவு, தொற்றா நோய் பிரிவு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த துணை இயக்குநர், காசநோயாளிகள் ஊட்டச்சத்து உணவு வாங்கி உண்பதற்காக மாதம்தோறும் அரசு சார்பில் காசநோயாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும் ரூபாய் 500 வழங்கும் திட்டம் கருங்குளத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த ஆய்வில் தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி, ஆய்வக நுட்பநர் தனலட்சுமி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தான சங்கர்வேல், எக்ஸ்ரே நுட்படநர் கிறிஸ்டின் குமாரதாஸ், நம்பிக்கை மைய ஆய்வக உட்பட சந்தனமாரி, மருத்துவமனை பணியாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.


