தாமிரபரணியின் பெரு
மைகள் பல உண்டு. இதிகாச புராணங்க
ளில் தாமிரபரணியின்
பெருமைகள் பல உண்டு. கொற்கை நகர
த்தின் முத்துகளின் சிற
ப்பை பற்றி கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்தி
ரம் கூறுகிறது. தாமிர
பரணி மகாத்மிய நூல்
களை படித்த சேர, சோழ
பாண்டிய மன்னர்கள், தாமிரபரணி நதிக்கரை கோயில்களைப் போல
தமிழ்நாட்டில் பல நதிக்கரைகளிலும், பல இடங்களிலும்,கோயில்களை
அமைத்துள்ளனர். வால்
மீகி ராமாயணத்தில்
தாமிரபரணி நதி கட
லில் கலக்கும் அழகை
பாரீர் என குறிப்பிடுகி
றார். கிமு 3ம் நூற்றாண்
டில் அசோகர் புத்தமத
த்தை பரப்பிய முக்கிய
பகுதியாக இவ்விடம்
குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான குகைகள் ஆதாரம் உள்ளன. கிமு 401 ல் வியாசர், தாமிர
பரணி மலைநாட்டில் அகத்தியர் அமைத்த
ஆசிரமங்களை பற்றி
குறிப்பு தந்துள்ளார்.
பிரஹத் சம்ஹிதை நூலில் தாமிரபரணி
கரையில் கிடைத்த முத்
துக்கள் தாமிரவர்ணத்
துடன் இருப்பதாக வராகமித்திரா குறிப்பிட்
டுள்ளார். 5ம் நூற்றாண்
டில் தாமிரபரணி நதி
ஓடும் பகுதி, இலங்கை
யின் மேற்கு பகுதியாக
குறிப்பிடப்பட்டுள்ளது. கிமு 543ல் ஆட்சியினை
கைப்பற்றிய விஜய மன்
னன் தாம்ப பண்ணி
என்ற சாம்ராஜ்யத்தை
நிர்மாணித்துள்ளான்.
2ம் நூற்றாண்டின் புத்தர்
கதைகளில் இவ்விட
த்தை தாம் ரத்வீபம் என
குறிப்பிட்டுள்ளது. பாரத
வருஷத்தின் 9 பகுதிக
ளில் ஒரு பகுதியாக இப்பகுதி குறிப்பிடப்பட்
டுள்ளது. இலங்கையின்
அனுராதாபுரம் பகுதி
க்கு சமீபமாக உள்ள
தாமிரபரணி இப்பகுதி
யினை குந்திதேவிக்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்
கும் போது யோகிகள், மகான்கள், வசித்து
மோட்சம் பெற்ற இப்பகுதி புண்ணிய பூமி என குறிப்பு உள்ளது. இன்னும் மக்களிடையே
வழிவழியாய் வந்த
ராமாயண சொல் காவி
யத்தில், ராமன் அனுமனிடம், சீதாவை தேடி போற நீ… பொதிய
மலை என்கிற இடத்தில்
அதிக நேரம் தங்கி
விடாதே…அதனின்
அழகும் நதியின் வனப்பும் உன்னை,மதிமங்க
வைத்துவிடும் , அதனால் நீ சீதாபிராட்டியை தேடும்பணி தடைபடும்என்று ராமபிரான் சொல்வதாக உண்டு. ஆற்றங்கரை நாகரீகத்தின் முன்னோடி தாமிரபரணிதான். பொதிகைமலையிலிருந்து இந்நதி, கடலில் சங்கமிக்கும்வரை இருகரைகளின் ஓரங்களில் எண்ணற்ற திருக்கோயில்களை அமைத்த விதம் மிகவும் சிறப்பு. இன்றளவும் காணலாம். அதிலும் நதியின் நடு, மற்றும் ஓரங்களில் புண்ணியமான தீர்த்தக்கட்டங்கள் அமைந்துள்ளது மிக தொன்மையான சிறப்பு. தீர்த்தக்கட்ட கற்பாறைகளில் புடை சிற்பங்கள், ஆதி எழுத்து வடிவங்கள் என்ன தீர்த்த கட்டம்? என்பதை சிற்பம்&வடிவங்களில் செதுக்கி இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். பாரதத்தின் பெரிய நதிகளின் தெய்வங்கள்கூட தன்னை புதுபித்து புண்ணியம் பெற்றுக்கொள்ள, தாமிரபரணி தாயை வணங்கி செல்வதாக தாமிரபரணி மகாத்மியம் என்ற பழம்பெரும் நூல் சொல்கிறது.
இப்படி தாமிரபரணியைபற்றிய
நிறைய களஞ்சியங்கள்
உண்டு.


