Passenger train in the Countryside near Pune India.
ஆன்மீக சுற்றுலா தலமான திருச்செந்தூருக்கு வரும் பிப்ரவரி மாதம் முதல் மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து திருச்செந்தூர்-சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்க கோரிக்கை வலுத்துள்ளது.
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச் செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆன்மீக சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டு மின்றி வெளி மாநிலங்க ளில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுக ளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி, தைப்பூச திருவி ழாக்களில் விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள் வார்கள். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா களை கட்டும். ரயில் மூலமாகவும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
சென்னை, கோவை, திருச்சி,மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ. ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய தொழில் நகரங்களில் திருச்செந்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளைச்சேர்ந்த வணிகர்கள், அரசுத்துறை மற்றும் தனியார் துறை யைச்சேர்ந்த தொழிலா ளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டபல் வாயிரக்கணக்கானோர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ரயில் சேவையையே அதி கம் பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில்களில் எப் போதும் கூட்டம் அலை மோதுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் வியா பாரிகள் மூலம் திருச்செந் தூர் ரயில் நிலையத்திற்கு நாளொன்றுக்கு சராசரி யாக லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கிறது. கந்தசஷ்டி விழா மற்றும் விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு ரூ.3 லட் சம் வரை வருமானம் கிடைக்கிறது. இந்நிலை யில் நெல்லை-திருச்செந் தூர் ரயில் பாதை மின்மய மாக்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் அனைத்தும் முடிந்து வரும் பிப்ரவரி மாதம் முதல் மின் சார ரயில் இயக்கப்படும் எனத்தெரிகிறது. இதனால் சென்னைக்கு திருச்செந் தூரில் இருந்து நேரடியாக நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக காலதாமதம் இன்றி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. திருச்செந்தூர் ரயில் நிலைய நடைமேடை அக லப்படுத்த வேண்டும். 24 பெட்டிகள் நிறுத்தக்கூடிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும். திருச் செந்தூர் ரயில் நிலையத் தில் பிட்லைன் அமைக்க வேண்டும் எனவும் பய ணிகள் எதிர்பார்க்கின்றனர். திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். அதிலும் பாமர மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் நாகர் கோவிலிலிருந்து நெல்லை வழியாக செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச் செந்தூரில் இருந்து 6 பெட்டிகள் இணைக்க வேண்டும்.
அதேபோன்று மேட்டுப் பாளையம் – திருச்செந்தூர் ரயில் அறிவிக்கப்பட்டு இன்னும் இயக்கப்படாமல் உள்ளது. அந்த ரயில் கோவை வழியாக இயக்க வேண்டும். இதன் மூலம் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பய ணிக்க ஏதுவாகும். மேலும் கோவை வழியாக இயக்கப் பட்டால் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச் செந்தூர் பகுதியில் உள்ள வியாபாரிகள் கோவையில் உள்ளவர்களும் பயணிக்க ஏதுவாகும் என பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.


