தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டியில் உறுப்பினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவரும் சமூக ஆர்வலருமான டாக்டர் எஸ் ஜே கென்னடியை தூத்துக்குடி ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் நியமித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த 17 வருடங்களாகப் பெண்களின் பொருளாதார மேம்பாடு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகள் செய்து வந்தாலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடுதலாக முயற்சியில் எடுத்து பல்வேறு வகையில் சிறப்பாகச் சேவை செய்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு, இளைஞர் மன்றங்களுக்கு, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று வழங்குதல்,
சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு மரக்கன்று நடுதல், வேம்பு, புளி, நாவல் போன்ற விதைகளைக் கொண்டு விதைப்பந்து தயாரித்து சாலை ஓரங்களிலும், வனப் பகுதிகளிலும் விதைத்தல், மேலும் ஒரு கோடி பனைமர விதைகளை நடுதல் போன்ற சேவைப் பணிகளில் தீவிரமாகத் தொடர்ந்து மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில தலைவரும், சமூக ஆர்வலருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்
சுற்றுச்சூழலைக் காக்கத் தொடர்ந்து செய்து வரும் இந்த சேவையைப் பாராட்டி, அங்கீகரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில் ராஜ் IAS தலைமையில் தமிழ்நாடு வனத் துறை மாவட்ட வன அதிகாரிஅபிஷேக் தாமோர் IFS செயலாளராகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS , மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணபிரான் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன் IAS தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் திருமிகு ஷொருஸ்ரீ அவர்கள் உட்பட மாவட்ட அளவில் 19 அதிகாரிகளை உறுப்பினர்களாக அமைக்கப்பட்டுள்ள “மாவட்ட கிரீன் கமிட்டி”யில் மேலும் சமூக ஆர்வலர் மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடியை உறுப்பினராக ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் அவர்கள் நியமித்துள்ளார்.
இக்குழு மாவட்டத்தில் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், காலியாக உள்ள தேவையான இடங்களில் புதிதாக மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது. இக்குழுவின் நோக்கமாகும்.


