தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து 6000 கனஅடி நீர் வீணாக கடலில் செல்கிறது.
வடகிழக்கு பருவமழை கடந்த 2 வார காலமாக பெய்து வருகிறது. இதனால் மேற்குதொடர்ச்சி மழைப்பகுதிகளில் உள்ள பாபநாசம், சேர்வலாறு அணைக்கட்டுகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 5வது நாளாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வீணாக கடலில் கலக்கு தண்ணீரை சேமிக்க சடையநேரி கால்வாய் பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


