ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் உத்தரவுபடி பள்ளி மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விபத்தில்லா தீபாவளி குறித்தும், வடகிழக்கு பருவமழை பேரிடர் மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை குறித்தும் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் இசக்கி தலைமை வகித்தார். பள்ளி தலையாசிரியர் முத்துசிவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் தீபாவளி பட்டாசுகளை வெடிப்பது குறித்தும் பேரிடர் மேலாண்மை குறித்தும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி விளக்கி கூறினார். மேலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தீயணைப்பு பணியாளர்கள் முத்துக்குமார், அரிகரபாலன், சங்கர், இராமச்சந்திரன், பழனி, பார்வதிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் முத்தையா, பாலசுப்பிரமணியன், சீதாலெட்சுமி, கோமதி, தேசிய மாணவர் படை ஆசிரியர் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


