தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கத் தலைவர் சந்திரசேகர் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது. உடன்குடி யூனியனில் நீரின்றி விவசாயம் அழிந்து மக்கள் ஊரை காலி செய்த வண்ணம் உள்ளனர். தாமிரபரணி ஆற்றில் மழைக்காலங்களில் ஸ்ரீ வைகுண்டம் அணையைத் தாண்டி 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்கிறது. இந்த தண்ணீரில் பொதுமக்கள் விவசாயிகள் பயன்பாட்டிற்கு என மருதூர் மேலக்கால் 1500 கன அடி தண்ணீர் இடவேண்டும். தற்போது சடையன் ஏரி கால்வாயில் 500 கன அடி தண்ணீர் வழங்கப்பட்டு வருவதை 2500 கன அடியாக உயர்த்தி உடன்குடி பகுதி புத்தன் தருவை குளத்திற்கு 750 கன அடி தண்ணீர் விட்டால் அதை சேர்ந்த 7குளங்களும் நிரும்பும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். நதிநீர் இணைப்பு திட்டத்தில் கன்னடியன் காலில் இருந்து 3500 கன அடி தண்ணீர் விவசாயத்தைப் பாதுகாக்க முடியும் இவ்வாறு கூறியுள்ளார்.


