திருச்செந்தூர் மைலப்பபுரத்தில் உள்ள தமிழ்நாடு விஸ்வபிரம்ம சந்ததியர் பொது மடத்தில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா நடந்தது.
இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து உடன்குடி செல்வம் ஜூவல்லரி உரிமையாளர் சண்முகசுந்தரம் விஸ்வபிரம்ம ஐவர்ண அனுமன் கொடியேற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட திருச்செந்தூர் ஸ்ரீ சண்முகம் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் இசக்கிமுத்துகுமார், உடன்குடி விஸ்வபிரம்ம திருப்பணிக்குழு வானமாமலை பெருமாள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், தலைவர் சங்கர வடிவேல், செயலாளர் சுப்பிரமணியன் (எ) மகாராஜன், பொருளாளர் சங்கர சுப்பிரமணியன், நிர்வாகக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விஸ்வபிரம்ம பொதுமண்டப நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.