சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக ஓசோன் தினவிழாவை முன்னிட்டு ஆலை வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக ஓசோன் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக பொது மேலாளர் (சுற்றுச்சூழல்) ரவிக்குமார் அனைவரையும் வரவேற்று, இன்றைய ஓசோன் தினத்தின் அவசியத்தை பற்றி வலியுறுத்தினார். மூத்த செயல் உதவித்தலைவர் (பணியகம்) சீனிவாசன் மண்வளம் காக்கவும், இயற்கையை பேணவும் அனைவரையும் அறிவுறுத்தினார்.
உதவித்தலைவர் (உற்பத்தி) சுரேஷ் ஆலையிலும், வீடுகளிலும் சுற்றுச்சூழல் நடப்பு பொருட்களை பயன்படுத்துவதை வலியுறுத்தினார். விழாவிற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எஸ்.வி.கலைவாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டு. விதைப்பந்துகள் மற்றும் மஞ்சப்பையை வழங்கி, மக்களின் அன்றாட சுற்றுச்சூழல் கடமைகளை வெளிக்கொணரும் வண்ணம் சிறப்புரை அளித்தார்.
உதவிப் பொறியாளர் பிரதீப் பாண்டியன் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அறிவியல் நிறைஞர் ஜெயகுமார் தூத்துக்குடி தண்ணீர் சேமிப்பு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கின் தீமையைப் பற்றி பேசினர். விழாவில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு மரக்கன்றுகளை ஆலையின் சார்பாக வழங்கினர்.
பூமி வெப்பமாயதலை தவிர்க்கும் நடவடிக்கைகளில் பங்கேற்பேன் என்ற உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் ஓசோன் தினத்தை சிறப்பிக்கும் விதமாக ஆலை வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. விழா ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு, சிவில், மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் செய்திருந்தனர்.