1858 – ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கனக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய போராகும்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் கொல்லப்பட்டனர்.
1908 – ஓர்வில் ரைட்டின் வானூர்தி தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த “தொமஸ் செல்ஃபிரிட்ஜ்” என்பவர் கொல்லப்பட்டார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.
1928 – சூறாவளி தென்கிழக்கு புளோறிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் கொல்லப்பட்டனர்.
1929 – லித்துவேனியாவில் இடம்பெற்ற புராட்சி ஒன்றில் அதிபர் ஆகுஸ்டீனஸ் வொல்டெமாரெஸ் பதவியிழந்தார்.
1939 – சோவியத் ஒன்றியம் போலந்தின் மீது படையெடுத்து கிழக்குப் பகுதியைப் பிடித்தது.
1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானம் தாங்கிக் கப்பல் ஒன்று ஜெர்மனியரால் தாக்கி அழிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ரஷ்யாவின் பிறயான்ஸ்க் நகரம் நாசிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1949 – டொரோண்டோ துறைமுகத்தில் கனேடியக் கப்பல் ஒன்று எரிந்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.
1956 – ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி காண்பிக்கப்பட்டது.
1974 – வங்காள தேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.
1976 – நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டது.
1978 – இஸ்ரேல், எகிப்து ஆகியன காம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1980 – போலந்தில் சொலிடாரிற்றி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.
1980 – நிக்கராகுவாவின் முன்னாள் அதிபர் அனாஸ்டாசியோ சொமோசா டெபாயில் பராகுவேயில் படுகொலை செய்யப்பட்டார்.
1991 – லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.
1993 – கடைசி ரஷ்யப் படை போலந்தில் இருந்து வெளியேறியது.
1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.


