தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் இந்து மக்கள் கட்சி சார்பில் தென்மண்டல அரசியல் பண்பு பயிற்சி முகாம் தமிழ் திருவின் பயிற்சி பட்டறை நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கையில் அவர் இவ்வாறு பேசினார்.
நேற்று முன்தினம் கேரளா மாநிலத்தில் விளிஞ்சம் துறைமுகம் தோன்றியுள்ளது. இந்த துறைமுகம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட வேண்டியது. இந்த துறைமுகம் குளச்சல் பகுதியில் வர வேண்டியது. இதற்காக பாஜக பொன் ராஜேந்திரன் அதிக முயற்சி எடுத்தார். ஆனால் தென்மாவட்டங்களில் எந்த வளர்ச்சி திட்டங்கள் வந்தாலும் அதை தடுக்க கிறிஸ்தவர்கள் முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த துறைமுகம் அங்கு சென்று விட்டது. தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். நிர்வாகம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்காக மூன்றாக பிரிக்க வேண்டும் என்கிறோம். இப்படி தென் மாவட்டத்தை தனி மாநிலமாக உருவாக்கி அதில் திமுக சார்பில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். திமுகவைச் சேர்ந்த உதயநிதி, கனிமொழியும் போட்டியிடலாம். வெற்றி பெறலாம். முதல்வராகலாம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தெரிந்திருக்கும் இந்த அரசு எவ்வளவு கையாலாகாத அரசாக செயல்படுகிறது என்பது. யார் திமுக அரசாங்கத்தை விமர்சனம் செய்தாலும் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் இந்தியா ஒழிக என்று சுவர் விளம்பரம் எழுதியவரை கைது செய்ய வலியுறுத்தி நாட்கள் பல ஆகிறது. ஆனால் நடவடிக்கை இல்லை. வரும் காலங்களில் தமிழர்கள் சிறுபான்மையினராக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தொடர் கொலை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் என்ன செய்து கொண்டிருக்கிறது. உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை தனியாக திமுகவிடம் கொடுத்து விட்டீர்களா? இந்த தொடர் கொலை சம்பவங்களுக்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உள்துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் இருக்கிறது. அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசிற்கும், பிரதமருக்கும் என்னுடைய கண்டத்தை தெரிவிக்கிறேன். ஆளுநர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மத்திய அமைச்சகத்துக்கு அறிக்கை கொடுக்க வேண்டும். திமுக அரசால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் அதிகமான பலன் அடைகிறார்கள். கிராமப்புற மக்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தது எடப்பாடி அவர்கள். தற்போது நடந்து வரும் கொலை சம்பவங்கள் அனைத்தும் எடப்பாடி ஆட்சி காலத்தில் நடந்திருந்தால் என்னவாயிருக்கும். எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா அவர்களின் ஆட்சியை விட சிறப்பான ஆட்சி கொடுத்தது எடப்பாடி அவர்கள் தான். என்று அவர் பேசினார்


