புதுக்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சிநேகவள்ளி பாலமுருகன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் கன்னியம்மாள் சண்முகசுந்தரம் முன்னிலை வைத்தார். அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ் தேவர் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தேவையான நோட்டுகள், பென்சில், பேனா, பாக்ஸ், வாட்டர் கேன் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
விழாவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாப்ஹையஸ், ஆசிரியைகள் ஜமிலா அன்ன செல்வி, பானுமதி, ஹெப்சிபா, திமுக மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பாலமுருகன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் கந்தசிவசுப்பு, கவுன்சிலர்கள் வள்ளிமுத்து, உச்சிமாகாளி ராமகிருஷ்ணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில மாணவரணி செயலாளர் கொம்பையா பாண்டியன், திமுக சண்முகசுந்தரம், புதுக்குடி குமார், நயினார், பள்ளி மேலாண்மை குழு தலைவி அருணா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி பானுமதி, இல்லந் தேடி கல்வி தன்னார்வலர் அபிநயா, வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயபாலன் துரைராஜ், தேவாசீர், பாலசுந்தரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) வனிதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


