ஸ்ரீவைகுண்டம் யாதவர் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க கிளையின் 31வது ஆண்டுவிழா நடந்தது.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க ஸ்ரீவைகுண்டம் கிளை சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். இந்த ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் யாதவர் திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது.
இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க தலைவர் வெங்கடாச்சாரி தலைமை வகித்தார். துணை தலைவர் மாடசாமி சொர்ணம் அனைவரையும் வறவேற்றார். செயலாளர் ராஜதேவமித்திரன் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் வரவு செலவு அறிக்கையை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி மண்டல தலைவர் தங்கவேல் ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு கூடுதல் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் குடும்ப பாதுகாப்பு நிதிக்கி நாமிநேசன் நியமனம் பற்றியும் விரிவாக விளக்கி பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட செயளாலர் பாண்டி, கூடுதல் உதவி கருவுல அலுவளர் முத்துராசா, பாரத வங்கி மேலாளர் சக்திவேல், திருச்செந்துர் கிளை தலைவர் பாஸ்கரன், நாசரேத் கிளை தலைவர் கொம்பையா, ராஜபாலையம் கிளை தலைவர் ஆறுமுகபெருமாள், தூத்துக்குடி மாவட்ட முன்னால் தலைவர் கந்தசாமி, ஆலோசகர் சக்திவேல், இணைசெயலாளர் நெல்லையப்பன் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு மத்திய அரசு போன்று மருத்துவப்படி மற்றும் அனைத்து ஓய்வூதிய பலன்களை வழங்கவேண்டும். தற்போது 80 வயது முடிந்த பின்பு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் 70 வயது தொடங்கியவுடன் வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு ஓய்வுதியர்கள் இறந்தால் குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சம் வழங்க வேண்டும். கம்யூட்டேசன் தொகை பிடிக்கும் காலத்தை 12ஆண்டுகளாக குறைக்க வேண்டும், சென்னை போன்று மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணச் சீட்டு வழங்க வேண்டும், ஓய்வூதியத் தந்தை நகரா அவர்களை நினைவு கூறும் வகையில் தபால்தலை வெளியிட வேண்டும், தேசிய ஓய்வூதிய கொள்கை ஏற்படுத்தி இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரியாக ஓய்வூதியம் நிர்ணயம் செய்திடல் வேண்டும். ஓய்வூதியர்கள் நலம் காத்திட ஓய்வு பெற்றோர் நல வாரியம் அமைத்திட வேண்டும், நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் நடைபெறும் கட்டணமில்லா சிகிச்சை முறையை ரத்து செய்துவிட்டு பழைய முறையான பணப்பட்டியல் பெற்று பணம் வழங்கும் முறை அமல்படுத்தப்படவேண்டும் உள்பட பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் துணைதலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயல் குழு உறுப்பினர்கள் பார்வதிநாதன், தாமஸ், ருக்குமணி, பாரூக், பாக்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.


