தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 40 வயதிற்கு மேலான வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள திருநங்கைகள் ஒய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 40 வயதிற்கு மேலான வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள திருநங்கைகள் ஒய்வூதியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஓய்வூதியத் தொகை பெற திருநங்கை அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகிய சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்காணும் ஆவணங்களுடன் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 01.07.2022க்குள் விண்ணப்பிக்கவும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 தொலைபேசி எண் 0461-2325606 என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


