
பேய்குளம் அருகே சோகம்
7 பேருடன் கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி கார்
2 தப்பித்தனர் – குழந்தை உள்பட 5 பேர் கதி என்ன?
பேய்குளம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னிவேன். 2 பேர் வெளியே வந்துள்ளனர். 5 பேர் கிணற்றுக்குள் மூழ்கிய வேனுக்குள் சிக்கி உள்ளார்கள். அவர்களை மீட்க தீயணைக்கும் படையினர் போராடி வருகிறார்கள்.
பேய்குளம் அருகே மீரான்குளம் கிராமத்தில் உள்ள. யாக்கோபு என்பவர் கிணறு சாலைக்கு அருகில் உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூர் வட்டம் வெள்ளாளன் விளை தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டைக்காக இன்று (17.5.2025) மாலை 5.00 மணியளவில் மீரான்குளம் – சிந்தாமணி சாலையில் ஆம்னி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை .மோசஸ் என்பவர் ஓட்டி வந்தார். அந்த கார் நிலை தடுமாறி யாக்கோப்புக்கு சொந்தமான கிணற்றில் விழுந்துள்ளது. காரில் 7 நபர்கள் இருந்துள்ளனர் அதில் ஷைனி கிருபாகரன் (வயது – 25) ஜெனிட்டா மற்றும் ஹெர்சோன் (வயது – 30) ஆகியோர் நீந்தி வெளியில் வந்துள்ளனர்.
மோசஸ், அவரது மனைவி வசந்தா, மகன் கிரோஷன் ஜெயபால் மகன் ரவி ஹெர்சோன் மகள் ஷெலின் (வயது – 1.1/2) ஆகியோர் காருக்குள் சிக்கி கொண்டனர்.
தப்பி வந்த இருவரும் அந்த வழியாகச் சென்றவர்களிடம் நடந்த விபரத்தை கூறி அழுதுள்ளனர். அவர்கள் அருகே உள்ள மீரான்குளம் கிராம மக்களிடம் கூறினர். உடனே கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அருகே உள்ள சாத்தான்குளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் பொதுமக்கள் உதவியுடன் இறங்கி தேடி வருகின்றனர்.
ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து உள்ளே மூழ்கிய காரை வெளியே தூககு முயற்சி செய்துவருகிறார்கள்.
கிணற்றுக்குள் குழந்தை உள்பட 5 பேர் சிக்கியுள்ள சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.