ஆழ்வார்திருநகரி ஆற்றுப்பாலம் தென்பகுதியில் வீரப்பெரும்பாட்டனார் சுந்தரலிங்கக்குடும்பனாரின் 253 ஆவது பிறந்த நாள் விழா எளிமையாக அதேவேளை மிக சிறப்பாக நிகழ்ந்தேறியது. நிகழ்வுக்கு தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி தென்மண்டிலச் செயலாளர் வரதை செல்வம் தலைமைத் தாங்கினார்.
தமிழ் ஆர்வலர் சேரன்துரை முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி தலைவர் வியனரசு அலங்கரித்து வைக்கப் பெற்றிருந்த மாவீரர் சுந்தரலிங்கக் குடும்பனாரின் திருவுருவப் படத்திற்கு
மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதைச் செலுத்தினார்.
செம்பூர் சா.நயினார் முன்னாள் தலைவர்:நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம்-ஆழ்வை)
மு.இராசேசு உழவர், தலைவர்: ஏர் உழவர் அனைத்து விவசாயிகள் சங்கம்- ஆத்தூர்,
செம்பூர் பெ.சுடலை, (நாம் தமிழர் கட்சி மேற்கு ஒன்றியச் செயலாளர்-ஆழ்வை)
பெ.செல்வம், வேதநாகபுரம், நா.விமல் வரதராசபுரம்,
ம.இசக்கி பாண்டியன்,
நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த சா.முகமது அப்துல் பாயிசு, தே.இசுரவேல்
உட்பட ஏளாரமானோர் நிகழ்வில் பங்கேற்று
வீரப்பெரும்பாட்டனார்க.சுந்தரலிங்கக்குடும்பனாரி படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர்.
விழா கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டு அரசுக்கு கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டன.
அவை வருமாறு;
1) இவ்விழா நிகழும் ஆழ்வார்திருநகரி ஆற்றுப் பாலம் தெற்குப் பகுதிக்கு
“மாவீரர் சுந்தரலிங்கனார் வட்டகம்” என இன்றுமுதல் பெயரிடப்படுகிறது,
இதை முறையாக ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மன்றத்தில் விண்ணப்பித்து அதிகார நிறைவாக அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுப்பது என ஒருமனதாக முடிவு செய்யப் பட்டது.
2) கவர்ணகிரில் அமைந்துள்ள “மாவீரர்” க.சுந்தரலிங்கனார் மணிமண்டத்திலுள்ள அவரது பொருந்தா சிலையை அகற்றிவிட்டு க.சுந்தரலிங்க குடும்பனார், “குதிரையிலிருந்து போர் புரிவது போன்ற கம்பீரத் தோற்றத்துடன்” ஆன முழு உருவச் சிலையை நிறுவ வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி தலைவர் அ.வியனரசு முன்வைத்த கோரிக்கையை கடந்த கால அ.இ. அ.தி.மு.க.அரசு ஏற்று ஆவண செய்வதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி க.பழனிச்சாமி அவர்கள் 10-11-2020 அன்று தூத்துக்குடியில் அறிவித்தார். ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு அதைக் கிடப்பில் போட்டுள்ள நிலைத் தொடர்புடைய சமூக மக்களைப் பெரிதும் கவலை அடை செய்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் க.கனிமொழி அவர்களையும் மாண்புமிகு அமைச்சர் அனிதா இரா. இராதாகிருஷ்ணன் அவர்களையும் இதில் தலையிட்டு க.சுந்தரலிங்க குடும்பனாரின் முழு உருவ சிலையை மணிமண்டபத்தில் நிறுவிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டு அரசை இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது.
3)தூத்துக்குடி வாகைக்குளம் வானூர்தி நிலையத்திற்கு “மாவீரர் சுந்தரலிங்கனார் வானூர்தி நிலையம்” என பெயரிட மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் க. கனிமொழி அவர்கள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி அவரை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
4) இவ்விழா நடைபெறும் இவ்விடத்தில் அதாவது ஆழ்வார் திருநகரி ஆற்றுப்பாலத்தின் தெற்குப் பகுதி “மாவீரர் சுந்தரலிங்கனார் வட்டகத்தில்” அவருடைய முழு உருவ சிலையை நிறுவ தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி தலைவர் அ.வியனரசு தலைமையில் “சிலை அமைப்புக் குழு” அமைப்பதது என இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது .
கூட்ட நிறைவில் கு.விக்னேசுவரன் அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.


