விளாத்திகுளம் அருகே பள்ளி நிலத்திற்கு உரிமை கோரும் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பள்ளியின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூரில் முத்துசாமிபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கடந்த 1936ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ஆபத்தான நிலையில் உள்ளதால் அந்த பள்ளியில் 2 வகுப்பறைகள் இடிக்கப்பட்டது.
தற்போது தென்புறம் உள்ள கட்டிடத்தை இடித்த பின்னர் ஒரு சமூகத்தினர் அந்த நிலம் பள்ளிக்கு சொந்தமில்லை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்கள்., எனவே மாணவர்களின் நலன் கருதி அந்த நிலத்தை பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமானது என மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


