சாத்தான்குளத்தில் மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கம் சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சாத்தான்குளத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணி சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை விற்பனை செய்யக்கூடாது, 18 வயது நிரம்பிய அனைவரும் 100 சதவீத வாக்குகளை பதிவு செய்வதை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
இதில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், சாத்தான்குளம் ஆங்கர் அகடாமி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


