
செய்துங்கநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா துவக்க தின விழா நடந்தது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா துவக்க தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜார் திடலில் வைத்து கொடி ஏற்று நிகழ்ச்சி மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பிஎப்ஐ ஸ்ரீவைகுண்டம் பகுதி தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி தொகுதி தலைவர் அபுஹ¨பைஸ் மற்றும் முகைதீன் ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் செய்யது பாஸில் சமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பிஎப்ஐ மாவட்ட செயலாளர் செய்யது அலி கரீம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கொடியை ஏற்றி வைத்தார். அவரை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல் காதர் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
அவரை தொடர்ந்து வழக்கறிஞர் அப்பாஸ், எஸ்டிபிஐ கட்சி தொகுதி செயலாளர் கல்வத் அஹமது கபீர் சிறப்புரை ஆற்றினர். இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.