ஆழ்வார்திருநகரியில் சமூக தொழில்சார் வல்லுநர் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் சமூக தொழில் சார் வல்லுனர்களுக்கான பணி விளக்க கூட்டம் இன்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். இளம் வல்லுநர் புஷ்பராஜ், தொழில்நுட்ப ஆதரவு நிறுவன அலுவலர் சரவணன், புத்தாக்கத்திட்ட மாவட்ட தொழில் மேம்பாடு அலுவலர் சேவியர் மணிராஜ், திறன் வளர்ப்பு அலுவலர் ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பெண்களால் நிர்வகிக்கப்படும் ஆழ்வை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயற்குழு கூட்டத்தில் தொடக்க நிலை செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆழ்வார்திருநகரி வட்டார அணித்தலைவர் பாலமுருகன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.