தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நெல் தரிசு உளுந்து பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு உளுந்து விதை ரகங்களான மதுரை 1 மற்றும் வம்பன் எட்டு ஆகியவை 5% மானிய விலையில் விநியோகம் விநியோகம் செய்யப்படுகின்றன. செய்துங்கநல்லூர் மற்றும் வல்லநாடு வேளாண்மை விரிவாக்கம் மையங்களில் இந்த விதைகள் இருப்பு உள்ளது. விபரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை அனுகிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.


