தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏரல் முத்தாரம்மன் கோவில் வணிக வளாகம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குரும்பூர் ராஜபதியைச் சேர்ந்த ரூபன் மகன் முத்துகுமார் (28), என்பதும் அவர் அப்பகுதியில் ஒருவரிடம் தகராறு செய்து, அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். அவர் மீது ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என மொத்தம் 7 வழக்குகள் உள்ளது.


