பெயர் முத்தாலங்குறிச்சி காமராசு
பெற்றோர் பெ. சங்கரசுப்பு (தந்தை),
சொர்ணம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை பொன்சிவகாமி
பிள்ளைகள் கா. அபிஷ்விக்னேஷ் (மகன்)
கா. ஆனந்தசொர்ணதுர்கா (மகள்)
உறவினர்கள் ச. தங்கப்பாண்டியன் (சகோதரர்),
ச. ஆறுமுகக்கனி (சகோதரி)
விருதுகள் 1. தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது,
2. நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி வழங்கிய
தமிழ்ரத்னா சிறப்பு விருது
முத்தாலங்குறிச்சி காமராசு இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு மாநிலத்தில் வாழ்ந்து வரும் ஓர் எழுத்தாளராவார். 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி இவர் பிறந்தார். வரலாற்றுச் செய்திகளைத் திரட்டி நூலாக்கும் கட்டுரையாளராக தொடர்ந்து இவர் இயங்கி வருகிறார். ஆதிச்சநல்லூர், கொற்கை, தாமிரபரணி, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற வரலாற்றுச் சிறப்புள்ள பகுதிகளுக்கு களப்பணியாளராகச் சென்று ஆய்வுகள் நடத்தி இதுவரை 51 நூல்களை எழுதியுள்ளார். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பிக்காமல் காலங்கடத்திவந்த மத்திய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்து வெற்றி கண்டவர் என்பதால் தமிழருலகில் நன்கு அறியப்படுகிறார். ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கவும் மேலும் சில பகுதிகளில் அகழ்வாராய்ச்சியைத் தொடரவும் இவரது வழக்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.முத்தாலங்குறிச்சி என்ற தாமிரபரணி நதிக்கரையோர கிராமத்தில் சங்கரசுப்பு சொர்ணம்மாள் தம்பதியருக்கு காமராசு மகனாகப் பிறந்தார்.முத்தாலங்குறிச்சி மற்றும் பாளையங்கோட்டையில் தொடக்கக்கல்வியை முடித்த இவர் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்தார். பேருந்து நடத்துனராக காமராசு தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மேடை நாடக நடிகர், நெல்லை வானொலி நாடக எழுத்தாளர், நூல் ஆசிரியர், திரைப்பட நடிகர் என தமிழ் உலகில் பன்முகங்களுடன் செயல்பட்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் ஒரு புகைப்பட நிறுவனத்தை நடத்திவரும் இவர் பொன்சொர்ணா என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.1987 ஆம் ஆண்டு தேவி வார இதழில் ஒரு துணுக்கு எழுத்தாளராக காமராசு எழுத்துலகுக்கு அறிமுகமானார். நாடக விழா நாடகங்கள் உள்பட இதுவரை நெல்லை வானொலிக்காக இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.கோயில் தல புராணங்களை நாளிதழ்களில் எழுத ஆரம்பித்த இவர் தற்போது கோயில்கள் தொடர்பான நூல்களையும் வரிசையாக எழுதிக் கொண்டிருக்கிறார்.நெல்லை தமிழ் முரசு இதழில் இவர் 5 ஆண்டுகளாக எழுதிய நதிக்கரையோரத்து அற்புதங்கள் என்ற தொடர் தலைத்தாமிரபரணி என்ற 1000 பக்கங்கள் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது.சக்தி விகடன் இதழில் காமராசு எழுதிய தாமிரபரணி கரையினிலே என்ற தொடரும் நூலாக வெளிவந்துள்ளது. ஆனந்த விகடன் இந்நூலை வெளியிட்டுள்ளது.அத்ரி மலை யாத்திரை என்ற தொடரை காமராசு தினகரன் நாளிதழில் தொடர்ந்து எழுதிவந்தார்.சூரியன் பதிப்பகம் இத்தொடரை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளது.
இருபது தென்னாட்டு சமீன்தாரர்களின் வரலாற்றைத் தொகுத்து ஒரு நூலாக இவர் வெளியிட்டுள்ளார். இவற்றைத் தவிர தினகரன், தினத்தந்தி நாளிதழ்களில் இவர் எழுதிய தொடர்களும் பல நூல்களாக வெளிவந்துள்ளன.ஆதிச்சநல்லூர் பற்றிய வல்லுநர்கள் கருத்துகளையும் ஆதிச்சநல்லூர் மாதிரி அறிக்கையையும் தொகுத்து ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017 என்ற நூல் தி தமிழ் திசை இந்து நாளிதழ் நூலாக வெளியிட்டுள்ளது.குணவதியம்மன் என்ற இவரது வரலாற்று நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடம்
பொருநை பூக்கள்
பொதிகை மலை அற்புதங்கள்
என் உயிரே விட்டுக்கொடு
தாமிரபரணி கரை சித்தர்கள்
ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
தென்னக கோயில்கள்
நடிகை ரோகிணி இயக்கிய அப்பாவின் மீசை, இப்ராகிம் ராவுத்தர் இயக்கத்தில் வெளியான புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், (பேருந்து நடத்துனராக) ராட்டினம் கே.எசு.தங்கசாமி இயக்கத்தில் வெளிவந்த எட்டுத்திக்கும் மதயானை போன்ற திரைப்படங்களில் காமராசு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
தமிழக அரசு வழங்கும் தமிழ்ச் செம்மல் விருது 2020 ஆம் ஆண்டு முத்தாலங்குறிச்சி காமராசுக்கு வழங்கப்பட்டது.


