தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து பணிகளை துரிதபடுத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று 17வது வார்டுக்கு உட்பட்ட அன்னை தெரசா நகரிலுள்ள மின்மோட்டார் அறையின் செயல்பாட்டை அமைச்சர் ஆய்வு செய்து தேங்கியிருக்கும் வெள்ளநீர் வெளியேற்றும் பணியை துரிதப்படுத்தினார்.
இதுபோல், 16வது வார்டுக்கு உட்பட்ட பி அன்டு டி காலனி 3வது தெரு, கதிர்வேல் நகர் பகுதிகளில் உள்ள மின் மோட்டார் அறைகளை அமைச்சர் ஆய்வு செய்து, மழை நீர் வெளியேற்றும் பணியை பார்வையிட்டார். ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


