
தூத்துக்குடியில் 3வது மாடியில் ஏசி பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, தவறிவிழுந்து ஏசி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அண்ணா நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் நாகூர் கனி மகன் இமான் அலி (35). ஏசி மெக்கானி. இவர் நேற்று தூத்துக்குடி எஸ்பிஜி கோவில் தெருவில் 3வது மாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏசி பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகக் கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் காவல்துறை ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.