தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வருகிற 18ஆம் தேதி பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வருகிற 18ஆம் தேதி (வியாழக்கிழமை) பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்- திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


