அமாவாசை நாட்களில் குறிப்பாக தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நாட்களில் பொதுமக்கள் நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது புனிதமாக கருதப்படுகிறது.
இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் தாமிரபரணி நதியில் புனித நீராடி, எள், தண்ணீர் தெளித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். நெல்லை மாவட்டத்தின் வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி நதிக்கரை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தாமிரபரணி நதிக்கரையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.


