தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜேம்ஸ் சுந்தர் சிங்கிற்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி கெளரவித்தார்.
தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர் ஜேம்ஸ் சுந்தர் சிங், ஏழை எளிய மக்களால் மற்றும் சமூக ஆர்வலர்களாலும் நல் மதிப்பு பெற்றுள்ள எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர். அவருக்கு மாவட்டத்தில் அதிக அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கான விருது மற்றும் சான்றிதழ்களை தூத்துக்குடியில் நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கி கௌரவித்தார். விழாவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


