பனைத் வாரிய தலைவர் நாராயணனுக்கு பனை பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் எஸ் ஜே கென்னடி வாழ்த்து தெரிவித்தார்.
************************************
தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் எ நாராயணனை தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவர் டாக்டர் எஸ் ஜே கென்னடி சென்னை அலுவலகத்தில் நேரில் சந்தித்து பனை ஓலையால் செய்யப்பட்ட மாலை அணிவித்து , பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு வழங்கினார்.
இதில் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி பெற வேண்டும் என உள்ளது. ஆனால் பனை மரங்களை வெட்ட தடை விதித்து அரசாணை வெளியிடப்படாததால் தொடர்ந்து தமிழகத்தில் அதிக அளவில் பனை மரங்களை செங்கல் சூளை மற்றும் விறகுக்காக வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன.ஆகவே பனை மரங்களை வெட்ட தடை விதித்து விரைவாக அரசாணை வெளியிட வேண்டும். பனைத் தொழிலாளர்களுக்கு (லைசென்ஸ்) உரிமம் வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். மேலும் உடனடியாக அனைவருக்கும் உரிமம் வழங்க வேண்டும்.
பனைத் தொழில் இல்லாத காலங்களில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்
பனை தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் பனையேறும் இயந்திரம் மற்றும் தளவாட பொருட்கள் வழங்க வேண்டும். உள்பட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை மாநிலத் தலைவர் டாக்டர் எஸ் ஜே கென்னடி வழங்கினார்.இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில செயலாளர் எம். டேனியல் மோசஸ், மாநிலத் துணைத் தலைவர் ஏ. போ. சுதாகர், தென் மண்டல தலைவர் எல் ராம்குமார், தென் மண்டல செயலாளர் ஜி. இம்மானுவேல், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செல்வ கணபதி உடன் இருந்தனர்


