188. தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத சுதந்திரபேராட்ட வீரர்கள்
இந்தியா சுதந்திரமடைய தாமிரபரணி கரை மைந்தர்கள் பட்ட பாட்டை பார்த்துக் கொண்டிருக் கிறோம். இதில் அவர்கள் அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டு அங்கு அனுபவித்த கஷ்டங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். கைதிகளுக்கு சாம்பாரும், மோரும் பெரிய இரும்பு அண்டாக் களில் கொண்டு வரும்போது அதில் சுத்தம் இருக்காது. இரும்பு மணம் சாப்பிடும் போது வீசும். சாதத்தில் புழுக்கள் ஏராளமாக கிடக்கும். சிலசமயம் பூரான்களும். சிலந்திப் பூச்சிகளும் சாப்பாட்டில் கிடக்கும்.
மாலை ஐந்து மணிக்கு மீண்டும் ஒரு கட்டிசோறு கொடுப்பார்கள். (காலையில் வழங்கிய கட்டியை விட சிறியதாக இருக்கும்) சாதமும். சாம்பாரும் கொடுப்பார்கள். மாலையில் மோர் கொடுக்க மாட்டார்கள். சிலருக்கு கேப்பைக்களி, சோளச்சோறு போடு மாறு நீதிபதியே கட்டளையிடுவார்.
சிறைக்குள் வந்த மறுநாள் மொட்டையடித்து விடுவார்கள். கம்பியைக் கூராக்கித் தீட்டி வைத்து மொட்டையடிப்பார்கள். சிலசமயம் மண்டையையும். முகத்தையும் ரம்பம் வைத்து அறுத்தது போல் இருக்கும். மாதம் ஒருமுறை இப்படிக் கொடுமைப்படுத்துவார்கள்.
சிறை நூலகத்திலிருந்து அரசியல் சார்பற்ற சில நூல்கள் கொடுக்கப்பட்டன. வேறு நூல்களோ. பத்திரிக்கைகளோ அனுமதிக்கப்பட மாட்டாது. இரகசியமாக இந்து பத்திரிக்கை வாங்கி ஒருவர் படிக்க மற்றவர் அறிந்து கொள்வர். அப்படி படிக்கும் போது தெரிந்து கொண்டால் அதற்கு தனி சித்திரவதை அனுப்பவிக்க வேண்டும். இந்த தகவலை யெல்லாம் பெ.சீநிவாசனின் என்ற தியாகி தனது சுயசரிதை நூலில் எழுதி யிருப்பார்.
இதே போல் தான் விடுதலை போராட்ட வீரர்கள்பட்ட பாடு பெரும் பாடாகும்.
தாமிரபரணி கரையில் உள்ள விடுதலை போராட்டவீரர்களை பற்றி நான் பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த முக்கியமா£ன நிகழ்வு ஒன்றை குறிப்பிடவேண்டியது உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று, அறியப்படாத தியாகிகளை கண்டறிந்து ஆவணப் படம் எடுக்க உதவியவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுச் சான்றுகளை வழங் கினார். அதில் எனக்கும் என் மகன் அபிஷ்விக்னேஷ்க்கும் சான்றிதழ் கிடைத்தது.
ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ் (கிக்ஷ்ணீபீவீ ளீணீ கினீக்ஷீவீt விணீலீஷீtsணீஸ்) முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்குவதற்காக, தூத்துக்குடி மாவட்ட நிர்வாக மானது,
சுதந்திரப் போராட்டத்திற்காகவும், அதில் ஒரு அங்கமாக உருவான முக்கிய நிகழ்வுகளுக்காகவும், உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கண்டறிந்து ஆவணப் படுத்தும் முயற்சியை மேற் கொண்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில முக்கிய வரலாற்றா சிரியர்களைத் தேடி, இரண்டு முக்கியமான பங்களிப்பாளர்களை அடையாளம் கண்டனர். அதில் நானும் நெய்தல் ஆண்டோ ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். நாங்கள் வழங்கிய வரலாறுகள் மற்றும் ஆதாரங்களைக்கேட்டு, 26 முக்கிய நபர்களின் பட்டியலையும் சிலநிகழ்வுகளை பற்றிய விரிவான விளக்கங்கள் பெறப்பட்டன. பின்னர், தொடர்புடைய இடங்கள் மற்றும் தொல்பொருட்களை புகைப்படம் எடுக்கத் தொடங்கினோம்.
இதற்காக, நாங்கள் புகைப்படக் கலைஞர்களுடன் ஈடுபட்டோம். பின்னர், அப்பகுதி மக்களின் உதவியுடன் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த இடங்களை கண்டறிந்து, அவற்றை புகைப்படம் எடுத்தோம்.
திட்டத்தில் பங்களிக்க ஆர்வமுள்ள பல்வேறு பள்ளி ஆசிரியர்களிடம் உதவி கேட்டோம். தயாரிக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பற்றி அவர்கள் பேசும் ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை நாங்கள் பதிவு செய்தோம். அசோகா பல்கலைக் கழகத்தில் உள்ள தன்னார்வலர்களின் உதவியுடன் நாங்கள் எழுதும் தமிழ் மற்றும் ஆங்கில ஆவணங்களை (விவரங்களை) மொழி பெயர்த்து துணை ஆவணங்களாக தயார் செய்து, சிஷீறீறீமீநீtஷீக்ஷீ ஜிலீஷீஷீtலீuளீuபீவீ சீஷீutuதீமீ நீலீணீஸீஸீமீறீ , tஷ்வீttமீக்ஷீ/யீணீநீமீ தீஷீஷீளீ போன்ற வலையதளத்திலும் வெளியிட்டுள்ளோம். . இந்த பணியில் ஈடுபட்ட வரலாற்றாசிரியர்களான நான் முத்தாலங்குறிச்சி காமராசு மற்றும் நெய்தல் யூ அண்டோ, தயாரிக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பற்றி பேசும் ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்த திரு. சரவணன் மற்றும் காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியர் அபிஷ் விக்னேஷ் மற்றும் பின்னணி குரல் கொடுத்த சென் சேவியர்ஸ் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களான நெய்தல் யூ. அண்டோ, அந்தோணி எட்வர்ட் யூஜின், ஜோசப் ஸ்டாலின் மனோகரன், பாக்கிய எழில்ராஜ் மற்றும் காமராஜ் கல்லூரி உதவி விரிவுரையாளர் திரு. அபிஷ் விக்னேஷ் , அசோகா பல்கலைக் கழகத்தில் மொழி பெயர்த்து துணை ஆவணங்களாக தயார் செய்த மாணவர்களுக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரி. செந்தில்ராஜ் பாராட்டுச் சான்றுகளை வழங்கி வாழ்த்தினார்.
இது என் எழுத்து துறையில் மற்றொரு பகுதிக்கு என்னை கூட்டிச்சென்றது. தாமிரபரணி, சித்தர்கள், ஆதிச்சநல்லூர் பொருநை அகழாய்வு, மலை பயணங்கள், ஜமீன்தார்கள், களரி மூலத்தினை தேடி பயணம் என்று அலைந்து திரிந்த என்னை உள்ளூரில் உள்ள
அறியப்படாத சுதந்திரப்போராட்ட வீரர்களை தேடி பயணம் செய்ய வைத்தார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு. செந்தில் ராஜ். மேலும் பயிற்சி கலெக்டராக வந்த ஸ்ருத் ஜெய் நாரயணன்( நடிகர் திருவாளர் சின்னி ஜெயந்த் அவர்களின் மகன்) ஆகியோர் கொடுத்த துண்டுதலில் பேரில் பல இடங்களில் சுற்றி அலைந்தேன். அப்போது தான் தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரப்போராட்டத்தில் நடந்த நான்கு சம்பவங்களையும், இவ்வூரில் சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்ட 300 வீரர்கள் பற்றி அறியும் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டேன். வருகிற ஆகஸ்ட் (2022)க்குள் தூத்துக்குடி மாவட்ட அறியப்படாத சுதந்திரப்போராட்ட வீரர்கள் பற்றி ஒரு நூல் எழுதி விடவேண்டும் என்று முடிவுக்கு வந்தேன். அதற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டேன்.
அதன் முதல் கட்டமாக 26 வீரர்களை பட்டியலிட்டோம். அதற்கே மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாக விருது கிடைத்து விட்டது. அப்படியென்றால் அத்தனை பேரையும் திரட்டினால் மிகப்பெரிய விருதுகளும் பாராட்டுகளும் குவியும் என்பது ஒரு புறமாக இருந்தாலும்.
அறியப்படாமல் மறைந்து கிடக்கும் விடுதலை போராட்ட வீரர்களை வெளியே கொண்டு வந்த அற்புதமான வாய்ப்பு கிடைக்கும்.
இதற்காக நாங்கள் தேடிய அற்புதமான நபர் ஆறுமுகநேரி தவசி முத்து மாறன்அய்யா. இவர் தூத்துக்குடி மாவட்ட சுதந்திரபேராட்ட தியாகிகள் வாரிசு சங்க தலைவர். இவர் மூலமாகத்தான் பல அற்புத தகவல்களை அறிய வேண்டும். அவர் கூறிய பல தகவல்கள் ஆச்சரியத்தினை ஏற்படுத்துவதாகவே இருந்தது.
எனவே அவருடன் நாங்கள் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, அமலிநகர், குலசேகரபட்டினம், உடன்குடி, மெஞ்ஞானபுரம், காயாமொழி, குரும்பூர் உள்பட பல பகுதியை சுற்றி செய்திகளை திரட்டினோம்.
அதற்காக அந்ததந்த பகுதியில் உள்ள வி.ஏ.ஓக்களை பயிற்சி ஆட்சி தலைவர்அவர்களின் நேர்முக உதவியாளர் செல்வககுமார் ஏற்பாடு செய்திருந்தார்.


