
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுபடி, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளம் தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த பாதாளம் என்பவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அரிவாளுடன் தவறான வார்த்தைகளை பேசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும் அங்கு வந்த போலீசாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட பாதாளம் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட மொத்தம் 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.