விளாத்திகுளம் அருகே கந்தசாமிபுரத்தில் பெண்கள் அதிகாரம் அளித்தல் மற்றும் தலைமைத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை – கந்தசாமிபுரம் கிராமத்தில், திருச்சி காவிரி திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலகம், பெண்கள் அதிகாரம் அளித்தல் மற்றும் பயனுள்ள நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுக்கான தலைமைத்துவம் திட்டம் வேம்பு, டான் பாஸ்கோ சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
பேரணியை விளாத்திகுளம் டான் போஸ்கோ மிஷனின் ரெக்டர் ஜெயன் ஜோசப், கொடியை அசைத்து நிகழ்வைத் தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்டவர்கள் உள்ளூர் நிர்வாகத்தில் பெண்களின் தலைமை, சமூக ஒத்துழைப்பு மற்றும் கூட்டுப் பொறுப்பு, நிலையான சமூக மேம்பாட்டிற்கான சமத்துவம், கல்வி மற்றும் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
காளியம்மன் கோவிலில் தொடங்கி கந்தசாமிபுரம் காலனியின் பிரதான சாலையில் நிறைவு பெற்றது. பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 73 பங்கேற்றனர்.


