தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகள் வீடுகள் கட்ட ஏதுவாக பிரதி வாரம் வெள்ளிக்கிழமை லோன் மேளா நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம் – கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு மொத்தம் 1700 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் வட்டார அளவில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயனாளிகளுக்கு கடன் வழங்குதல் லோன் மேளா நடத்தி பயனாளிகள் வீடுகள் கட்ட ஏதுவாக கூடுதல் தொகை ரூ.1.00 இலட்சம் மத்திய கூட்டுறவு வங்கியின் இசைவோடு பிரதி வாரம் வெள்ளிக்கிழமை அன்று சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கிளில் காலை 10.00 மணிக்கு லோன் மேளா மண்டல அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில் வங்கியின் முகாம் அலுவலர்கள் வங்கி சேமிப்பு கணக்கு படிவம், கடன் விண்ணப்பம் ஆகியவற்றை தங்களுடன் எடுத்து வருவார்கள். மனுதாரர்கள் மேற்படி முகாமில் கலந்து கொள்ள வரும் போது ஜாமீன்தாரர்கள் இருவரை அவர்களுடன் அழைத்து வரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
லோன்மேளாவில் கலைஞர் கனவு இல்லம் ஒதுக்கீட்டு ஆணை அசல், மனுதாரர் புகைப்படம் -3, மனுதாரர் மற்றும் 2 ஜாமீன்தாரர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல்கள், மனுதாரரின் பான் கார்டு நகல், சாதிச் சான்றிதழ் நகல் ஆகிய ஆவணங்களுடன் வர வேண்டும்.
வங்கிப் பணியாளர்கள் தொலைபேசி எண்கள் விபரம்

எனவே, பிரதிவாரம் வெள்ளியன்று சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் லோன்மேளாவில் கலந்து கொண்டு அன்றையதினம் ஆஜராகி பணியிலிருக்கும் வங்கி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்களை தொடர்பு கொண்டு கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் பயனடைய மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


