தென்காசி மாவட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை பள்ளி திட்டத்தினை ரிலையன்ஸ் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. உளுந்து மற்றும் மக்காசோளம் பயிரிடப்படும் வட்டாரங்களில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் நிலத்தை பண்படுத்துதல், உரமேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவத்தின் மூலம் விவசாயத்தில் இழப்பு வராமல் இருப்பதறக்கு உரிய வழிவகை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் விவசாயிகளிடத்தில் மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கீழ நலாந்துலா, கொக்குகுளம், தியாகராஜபுரம், சிவகாமியாபுரம் மற்றும் ஆராய்ச்சிபட்டி கிராமங்களில் இருந்து மண் மாதிரி எடுக்கப்பட்டது. கோவில்பட்டியில் இயங்கும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் வேளாண் அலுவலர்கள் லலிதா, செல்வமாலதி மற்றும் குழுவினர் மண்மாதிரி சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த முகாம்களில் 60 க்கும் அதிகமான விவசாயிகள் மண் மாதிரிகளை வழங்கினர்.


