நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைப் பாதிரியாராக பொறுப்பேற்றுள்ள ஹென்றி ஜீவானந்தத்திற்கு திருச்சபை மக்களால் வரவேற்பு விழா நடத்தப்பட்டது.
நாசரேத் தூய யோவான் பேராலய புதிய தலைமை குருவாக பதவி ஏற்றுள்ள ஹென்றி ஜீவானந்தம் அவர்களுக்கு வரவேற்பும், இதற்கு முன்பு பணியாற்றி ஓய்வுபெற்ற தலைமைகுரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி க்கு பிரிவுபச்சார விழாவும் நாசரேத் தூய யோவான் பேராலய மண்டபத்தில் வைத்து நேற்று மதியம் 11 மணிக்கு நடைபெற்றது. விழா ஆரம்பமாக தலைமைப் பாதிரியார் ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். விழாவில் புதிய,பழைய குருவானவர்களை பாராட்டியும், வாழ்த்தியும் சபை மக்கள் பேசினர்.
விழாவில்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் செல்வின், முன்னாள் சேகர பொருளாளர் மர்காஷிஸ் தேவதாஸ், முன்னாள் சேகர செயலாளர்கள் எலியேசர், ஆனந்தராஜ், சேகர மன்ற உறுப்பினர்கள் எபி,ஜேம்ஸ், திவாகர், சாம்சன், சபை ஊழியர்கள் ஜெபராஜ், சாமுவேல், ஜெசு உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற பேராலய தலைமைக் குரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி க்கு புதிதாக பொறுப்பேற்று உள்ள தலைமைக்குரு ஹென்றி ஜீவானந்தம் மோதிரத்தை பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்வில் திருச்சபை மக்கள் ஆண்களும், பெண்களும், சிறியவர்களுமாக திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிறைவாக நாசரேத் தூய யோவான் பேராலய உதவி பாதிரியார் பொன்செல்வன் அசோக்குமார் நிறைவு ஜெபம் செய்தார். ஓய்வு பெற்ற குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஏற்புரை ஆற்றினார்.புதிய தலைமை பாதிரியாராக பொறுப்பு ஏற்றுள்ள ஹென்றி ஜீவானந்தம் ஆசி வழங்கினார்.


