2011 ஆம் ஆண்டு காவல்துறையில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் 12 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வு வழங்காததால் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உதவி ஆய்வாளர் ஒருவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில், கடந்த 2011ம் ஆண்டு மாண்புமிகு தமிழக முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களது ஆட்சியில் நேரடி உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டு 13 ஆண்டுகளாக ஒரு பதவி உயர்வும் இல்லாமல் தேர்வு தரநிலையில் (Selection Grade) உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறேன், மற்ற அரசு துறைகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகளுக்குள்ளாகவே பதவி உயர்வு வழங்கப்பட்டுவிடுகிறது,
மேலும் 10 ஆண்டுகளுக்குள் அடுத்த பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற அரசு விதி இருந்தும் காவல்துறையில் மட்டும் மேற்கண்ட அரசு விதி முறை பின்பற்றபடுவதில்லை இதற்கு முன் தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் இதே நிலை தான் நீடித்தது ஆனால் மாண்புமிகு முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் 10 ஆண்டுகளில் முதல் நிலை காவலர்களாகவும் 15 ஆண்டுகளில் தலைமை காவலர்களாகவும் 25 ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெறும் வகையில் அரசாணை பிறப்பித்து காவலர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தார்
ஆனால் நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இதுநாள் வரை எந்த வித கருணையும் காட்டப்படாத நிலைமையே நீடித்து வருகிறது, பத்து ஆண்டுகள் தாண்டியும் பதவி உயர்வு வழங்கப்படாதது எங்களுக்கு மனதளவில் சோர்வை ஏற்படுத்துவதை அறிந்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் தமிழகத்தில் அதிக குற்றங்கள் நிகழும் உதவி ஆய்வாளர் தலைமையில் இயங்கும் 423 காவல் நிலையங்களை கண்டறிந்து அந்த காவல் நிலையங்களில் ஆய்வாளர் பதவிக்கு தரம் உயர்த்தினால் குற்றங்களை கட்டுபடுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும், எங்களின் குறைகளை தீர்கவும் ஏதுவாக இருக்கும் என்று பார்வை-1ல் கண்ட கடிதம் உள்துறை செயளாலருக்கு அனுப்பப்பட்டது
ஆனால் மேற்படி தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் பரிந்துறையை உள்துறை செயளாலர் அவர்கள் நிதிசுமையினை சுட்டி காண்பித்து தற்போது தரம் உயர்த்த முடியாது சூழல் உள்ளது என்று பார்வை-2ல் கண்ட கடிதத்தின் படி திருப்பி அனுப்பி உள்ளார். கடந்த 2011ம் ஆண்டு நேரடியாக பணியில் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர்கள் அனைவரும் 10 ஆண்டுகள் பணி முடித்த காரணத்தால் தற்போது ஆய்வாளர் படி நிலைக்கு சம்பளம் பெற்றுவருகிறோம். இதனால் அரசுக்கு எந்த வித நிதிச்சுமையும் ஏற்படாது.
மேலும் தமிழக காவல் துறையில் நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டு 12 ஆண்டுகள் தாண்டியும் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ள ஒரே பேட்ச் உதவி ஆய்வாளர்கள் நாங்களாகவே உள்ளோம் என்பதை பணிந்து தெரிவித்துக்கொண்டு அறவழியில் நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எங்கள் மீது கருணை கொண்டு எங்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்க தக்க ஆணை பிறப்பித்து எங்களது வாழ்வில் ஒளி ஏற்றி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


