தூத்துக்குடியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழா மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சார்பில் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாள் விழா மரக்கன்று நடும் விழா உலக கைகழுவும் தினம் விழா நடைபெற்றது. விழாவிற்கு பணிக்க நாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார்.
சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை இயக்குனர் காமாட்சி முருகன் அவர்கள் மரக்கன்றுகளை வழங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மகளிர் நல மன்ற தலைவர் மைதிலி செல்வராஜ் மரக்கன்றுகளை நட்டார். ஆசிரியர் எழிலன் சிறப்புரை ஆற்றினார். நெடுஞ்சாலை செல்வராஜ் அப்துல் கலாம் பிறந்த தின கவிதையை வாசித்தார். முன்னதாக ஆசிரியை தேவி வரவேற்று பேசினார்.
சுகாதார அலுவலர் பாலகுருசாமி அவர்கள் கை கழுவுவது எப்படி என்று குழந்தைகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். நூலகத்திற்கு அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. விழாவில் நலம் தரும் விநாயகர் ஆலய பொருளாளர் பத்மநாபன், செயலாளர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


