சங்கரலிங்கபுரம் அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் அருகேயுள்ள கீழ கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் சண்முகலட்சுமி (18). இவரைக் கடந்த 13ம் தேதி முதல் காணவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மாரிமுத்து சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


