சிந்தலக்கரை காளி பராசக்தி தவசித்தர் பீடத்தில் நடைபெற்ற ஆடிப்பூர வளைகாப்பு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே நாற்கரச்சாலை ஓரத்தில் அமைந்துள்ள சிந்தலக்கரை காளி பராசக்தி தவசித்தர் பீடத்தில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு காளிபராசக்திக்கு அதிகாலை 4 மணிக்கு மஞ்சள், இளநீர், பால், சந்தனம் .தேன் உள்ளிட்ட பல்வேறு மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் 42 அடி உயர வெட்காளி அம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பல்வேறு வகையான வண்ண வளையல்களால் மாலை அணிவிக்கப்பட்டு ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு 50 ரூபாய் நோட்டு மாலை, எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது
மதியம் ராமமூர்த்தி சுவாமிகள்ஆசியுடன் மன்ற அறங்காவலர் திருக்குமரன் யாக சாலை பூஜையை நடத்தினார். அப்ேபாது குழந்தையில்லாத தம்பதியினர் வெட்காளியம்மன் முன்பு அமர்ந்து வளையல், சந்தனம், குங்குமம், இனிப்பு வைத்து பூஜை நடத்தினர். இரவில் சித்தருக்கு விளக்கு பூஜைக்கு பின்னர், குருபூஜை வழிபாடு நடந்தது. இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ்கள், வேன்களில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் முதன்மை நீதிபதி கருணாநிதி மற்றும் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரையிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், தஞ்சாவூர் தென்காசிஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இவ்விழாவிற்கு விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தர பாண்டியன் தலைமையில் எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை காளிபராசக்தி தவசித்தர் பீட நிர்வாக அறங்காவலர் திருக்குமரன் தலைமையில் மன்றத்தினர் செய்து இருந்தனர்.


