78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் வசவப்பபுரம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து (15.08.2024) இன்று நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்திற்கு வசவப்பபுரம் ஊராட்சி மன்றத் தலைவி திருமதி.சாந்தி லட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் திருமதி.முத்து முன்னிலை வகித்தார்.
ஊராட்சி மன்ற தலைவி திருமதி.சாந்தி லட்சுமி அவர்கள் பேசுகையில்,
சுகாதார களப்பணியாளர்கள் மூலம் நடைபெறும் காசநோய் கண்டறியும் முகாம்களில் போதிய ஒத்துழைப்பு நல்கிடவும்,
ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் சுகாதார களப்பணியாளர்கள் தங்களது பகுதிகளில் காசநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தி 2025க்குள் காசநோய் இல்லா வசவப்பபுரம் ஊராட்சியை உருவாக்கிட தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்று கூறினார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் அனவரதநல்லூர் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சங்கரநாராயணன், வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அப்துல் ரஹீம் ஹீரா, வசவப்பபுரம் கிராம நிர்வாக அலுவலர் திரு.மாரிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டன்ர்.


